Home தாயக செய்திகள் மருந்து பற்றாக்குறை – வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களின் செயற்பாடுகள் பாதிப்பு!

மருந்து பற்றாக்குறை – வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களின் செயற்பாடுகள் பாதிப்பு!

39
0

நாடளாவிய ரீதியில், வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களின் செயற்பாடுகள் “மருந்து பற்றாக்குறை” காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

லேடி றிட்ஜ்வே வைத்தியசாலை உட்பட நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் தொடர்ந்தும் “அன்டிபயோட்டிக்ஸ்” “பஞ்சு” மற்றும் வலி நிவாரணிகள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சில மருத்துவமனைகள் சாதாரண சத்திர சிகிச்சை குறித்து மாத்திரம் கவனம் செலுத்துவதாகவும், இருப்பினும் அத்தியாவசிய அவசர சத்த்திர சிகிச்சைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்ட அவர், தாம் கேட்கும் பல மருந்துவகைகள் மருந்துகள் விநியோகப் பிரிவில் இல்லாத நிலை காணப்படுவதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.