Home உலக செய்திகள் பிரித்தானியாவின் west Belfast இல் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!

பிரித்தானியாவின் west Belfast இல் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!

42
0

பிரித்தானியாவின் west Belfast இல் உள்ள சமூக கூடத்தில் நேற்று பிற்பகலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

டொனகல் செல்டிக் கால்பந்து கிளப்பில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று டோனகல் செல்டிக் பகுதியில் நடந்த குற்றத்தால் இந்த சமூகத்தில் முழு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த west Belfast எம்.பி பால் மாஸ்கி (Paul Maskey) இறந்த மனிதரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிப்பதாகவும், இந்த தாக்குதால் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்க முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.