Home செய்திகள் இளம் கணவனும் மனைவியும் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

இளம் கணவனும் மனைவியும் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

25
0

வல்வெட்டித்துறை, நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் இளம் கணவனும் மனைவியும் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (30) அவரது மனைவி கிருசாந்தினி (26) ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று (01) அதிகாலை 4.15 மணியளவில் தம்பதி உறங்கிய அறை தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவமானது வீட்டின் அறையில் இடம்பெற்றிருப்பதால் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.