Home தாயக செய்திகள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதன்முறையாக தாடை அறுவைசிகிச்சை வெற்றி:

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதன்முறையாக தாடை அறுவைசிகிச்சை வெற்றி:

20
0

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதன்முறையாக வாய், முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அகிலன் தலைமையிலான குழுவினரால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு 6 மணிநேர முயற்சியில் வெற்றிகரமாக தாடை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.