யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் நால்வர் மதுபானம் மற்றும் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர் ஒருவர் மாவா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நிலையிலும், ஏனைய மூவரும் மதுபானம் அருந்தியிருந்த நிலையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு வருகை தந்ததாகவும் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மதுபானம் அருந்தியதாகவும் மாணவர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.
அவர்கள் க.பொ.த சாதாரண தரத்தை முடித்து தற்போது உயர் தரத்தில் கல்வி பயிலும் 17, 18 வயதுடையவர்கள் என விசாரணையில் கண்டற்றியப்பட்டது.
நால்வரை கைது செய்து யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
மாணவர்களின் பெற்றோரை அழைத்து மூத்த பொலிஸ் அத்தியட்சகர், பிள்ளைகள் தொடர்பில் கண்காணிப்பு இல்லையா என எச்சரித்ததோடு, பாடசாலையில் பயிலும் மாணவர்களை நீதிமன்றில் முற்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதனால் ஏற்படும் பாதகநிலை தொடர்பில் எடுத்துரைத்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் எச்சரித்து பெற்றோரிடம் மாணவர்களை ஒப்படைத்தார்.