பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக இளைஞர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், உயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி மற்றுமொரு சட்டவிரோத அடக்குமுறையை அமுல்படுத்துவதாகவும், சுதந்திர ஊடகங்களின் இருப்புக்கு இடையூறாக ஊடக அடக்குமுறை அமுல்படுத்துவதாகவும், இதன் பிரகாரம், அரசாங்கம் மும்முனை அடக்குமுறைகளை ஆரம்பித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகவும், சில பாடசாலைகளில் குழந்தைகள் மதிய உணவுக்காக இளநீர் சுதைகளை கொண்டு வருவதாகவும், இது குறித்து அரசாங்கத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டு மக்கள் சௌபாக்கியமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக தாமரை மொட்டுக்கே வாக்களித்ததாகவும், ஆனால் தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே பார்க்கும் போது பாரிய துன்பங்களை அனுபவிக்கும் மக்களின் வாழ்க்கையையே காணமுடியும் எனவும் விதியின் விளைவாக இரண்டு வருடங்களின் பின்னர் குழந்தைகளுக்கு பால் மா பாக்கெட் வாங்க இந்நாட்டின் பெற்றோர்களுக்கு குளங்களில் இறங்கி தாமரை கிழங்குகளை தோண்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.