Home முக்கிய செய்திகள் கொழும்பில் – ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம் : பலர் கைது

கொழும்பில் – ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம் : பலர் கைது

22
0

கொழும்பில் – சோஷலிச இளைஞர் சங்கத்தினால் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

அது மட்டுமன்றி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே கொழும்பில் இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எதிர்ப்பு போராட்டத்தை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

சுகாதார அமைச்சுக்கு அண்மித்த பகுதியில் போராட்ட பேரணி சென்ற வேளையிலேயே இந்த கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டக்கார்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான நிலை உருவாகியுள்ளது.