Home தாயக செய்திகள் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: யா.ப.மா.ஒ

பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: யா.ப.மா.ஒ

8
0

குருந்தூர் மலைப்பகுதியில் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்துகின்றது.

இன்று உலக சமாதான தினம் அனைத்து நாடுகளினாலும் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையிலும் இலங்கையில் வாழும் தமிழ்மக்களினால் அதனை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இன்றும் கூட இலங்கை வாழ் வடகிழக்கு மக்கள் தமது பூர்வீக நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான பேராட்டங்களினை நடாத்திய வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக முல்லைத்தீவில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலமான குருந்தூர் மலையில் சிங்கள பௌத்த பேரினவாதம் தொல்லியல் திணைக்களத்தின் எதேச்சதிகாரத்தின் மூலம் விகாரை ஒன்றினை அத்துமீறி அமைத்து வருகின்றது.

ஏற்கனவே அங்கு தமிழர்கள் வழிபட்டு வந்த ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த நிலையில் தண்ணீர் முறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்துகின்றது.