Home செய்திகள் வடக்கு ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து போராட்டத்தினை இடைநிறுத்திய அரசியல் கைதிகள்!

வடக்கு ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து போராட்டத்தினை இடைநிறுத்திய அரசியல் கைதிகள்!

43
0

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் வாக்குறுதிக்கமைய போராட்டத்தை கைவிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று சனிக்கிழமை கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தமது உறவுகளான அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடி, விரைவில் விடுதலைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவித்ததை சிறையில் தமது உறவுகள் போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு ஆதரவாக யாழில் தாங்கள் முன்னெடுத்த போராட்டத்தையும் கைவிடுவதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர் .

ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொலைபேசி வாயிலாக உண்ணாவிரதம் இருக்கும் சிறைக்கைதிகளுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.