
யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 6 பேர் அகழ்வுப் பணிக்கு தயாராகிய நிலையில் காவல்துறை புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தில் உள்ளவர்களும் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து புதையலை அகழ்வதற்கான அனுமதியினை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரியிருந்தனர்.
நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று சனிக்கிழமை புதையல் அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை புதையல் அகழ்வதற்காக கொழும்பில் இருந்து விசேட அணியினர் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.