Home செய்திகள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி சாணக்கியன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்:

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி சாணக்கியன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்:

40
0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மேற்கொண்டுவரும் உண்ணா நிலைப் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உண்ணா நிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

சாணக்கியன் தலைமையில் ஆரம்பமான குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், ஞா.சிவநேசன், முன்னாள் அரசாங்க அதிபர் உதயகுமார், மதகுருமார் உட்பட அரசியல்வாதிகளும், தமிழின உணர்வாளர்கள் சிலரும் பங்குகொண்டிருந்தனர்.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும், என வலியுறுத்தியே குறித்த உணவு தவிர்ப்பு போராட்டம் இஅடம்பெற்றுவருகிறது.