Home செய்திகள் கொலைகாரர்களும், மோசடியாளர்களும் உள்ள இடத்தில் எவ்வாறு தேசிய சபை நிர்வாகத்தில் ஒன்றிணைவது: மக்கள் விடுதலை முன்னணி

கொலைகாரர்களும், மோசடியாளர்களும் உள்ள இடத்தில் எவ்வாறு தேசிய சபை நிர்வாகத்தில் ஒன்றிணைவது: மக்கள் விடுதலை முன்னணி

46
0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றவாளிகளை தண்டிப்பதிலோ, அல்லது அது தொடர்பில் விசாரணைகள் கொள்ளல் போன்றவற்ரில் அவதானம் செலுத்தவில்லை,மாறாக அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கி, பதவிகளும் வழங்கியுள்ளார்.

கொலைகாரர்கள், மோசடியாளர்கள், ஊழல்வாதிகள், நீதிமன்றத்தால் குற்றவாளி என குறிப்பிட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுடன் எவ்வாறு தேசிய சபை நிர்வாகத்தில் ஒன்றிணைவது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் (15) வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்களும்,ஊழல் மோசடியாளர்களும் காரணம் என சர்வதேசம் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் எதுவும் இடம்பெறாத வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.பொருளாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கியவர்களால் ஒருபோதும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாட்டு மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள். நடுத்தர குடும்பங்கள் ஒருவேளை உணவை உட்கொள்ள முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை மிகவும் வேதனைக்குரியது.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தி பொருளாதாரத்தை அதள பாதாளத்திற்கு தள்ளியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தவில்லை,மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்த நிலையில் உள்ளது.நடுத்தர மக்கள் பொருளாதார ரீpதியில் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,வாழ்க்கையில் விரக்தியடைந்துள்ளார்கள்.தமது பிள்ளைகளின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளார்கள்.பொருளாதார பாதிப்பிற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு பொருளாதா நெருக்கடி ஒருபோதும் தாக்கம் செலுத்தாது.அவர்கள் சுகபோகமாகவே வாழ்கிறார்கள்.

நாட்டு மக்கள் ஒரு இறாத்தல் பாண் கூட வாங்க முடியாத நிலையை எதிர்கொண்டுள்ள போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் 38 இராஜாங்க அமைச்சுக்களை நியமித்துள்ளார்.38 இராஜாங்க அமைச்சர்களுக்கும்,அவர்களுக்கான சேவையாளர்களுக்கும் மாதம் எரிபொருளுக்கு மாத்திரம் 4 கோடியே 13 இலட்சம் செலவாகும்.வருடாந்தம் 38 இராஜாங்க அமைச்சுக்களுக்கு எரிபொருளுக்கு மாத்திரம் 49 கோடியே 69 .இலட்சம் செலவாகும்.பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிடும் ஜனாதிபதி இராஜாங்க அமைச்சு,அமைச்சரவை அமைச்சு நியமனத்தில் எவ்வித வரையறையையும் பின்பற்றவில்லை.தன்னை தெரிவு செய்தவர்களை திருப்திப்படுத்த இராஜாங்க அமைச்சுக்களை தாராளப்படுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்,காலி முகத்திடல் போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்ட சனத் நிஷாந்த,சீன உர இறக்குமதி விவகாரத்தில் 69 இலட்ச டொலரை வீண்விரயமாக்கிய சஷிந்திர ராஜபக்ஷ,பாராளுமன்றில் மிளகாய் தூள் பிரயோகம் செய்த பிரசன்ன ரணவீர மற்றும் கப்பம் கோரல் குற்றச்சாட்டில் நீதிமன்றில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு இராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கொலைகாரர்கள்,ஊழல்வாதிகள்,அரச நிதி மோசடியாளர்கள்,மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் தரப்பினருடன் எவ்வாறு தேசிய சபை நிர்வாகத்தில் ஒன்றிணைவது.ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.ஆகவே தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய நாட்டு மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.