Home செய்திகள் யாழ். மாவட்டத்தில் – கடந்த 8 ஆண்டுகளில் அனுமதி பெற்று ஒரு லட்சத்து 572...

யாழ். மாவட்டத்தில் – கடந்த 8 ஆண்டுகளில் அனுமதி பெற்று ஒரு லட்சத்து 572 பனை மரங்கள் தறிப்பு!

40
0

யாழ். மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அனுமதி பெற்று மாத்திரம் ஒரு லட்சத்து 572 பனை மரங்கள் தறிக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபையின் புள்ளிவிபர அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

அப்புளிவிபரத்தின்படி யாழ். மாவட்டத்தில் சங்கானை, காரைநகர், கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகளவான பனை மரங்கள் அனுமதியுடன் தறிக்கப்பட்டுள்ளன.

அனுமதி பெற்று மாத்திரமே கிட்டத்தட்ட ஆறு (6) இலட்சம் பனைகள் தறிக்க்கப்பட்டிருந்தால், அனுமதி பெறாமல் எத்தனை ஆயிரம் பனை மரங்கள் தறிக்கப்பட்டிருக்கும்.

அதுபோக, யாழ்மாவட்டத்தில் அதிக பனைவளம், தென்னைவளம், தோட்ட நிலங்கள் என பெரும்பாலான பிரதேசத்தை ஆக்கிரமித்திருக்கும் ஶ்ரீலங்கா படைகளால் எத்தனை இலட்சம் அழிக்கப்பட்டு அல்லது தறிக்கப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டுபோகப்பட்டிருக்கும் என்பதையும் பனை அபிவிருத்தி சபை கருத்தில் கொண்டு இனியேனும் பனைவளங்கள் அதிகளவில் அழிக்கப்படுவதை தடுக்கவும், படைகள் வசமுள்ள பகுதிகளில் எஞ்சியுள்ள பனைகளை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்னைப் பயிர்ச்செய்கையை பெரிய அளவில் மேற்கொள்வதற்காக, பனை மரங்கள் உள்ள காணிகளை தீயிட்டு அழிக்கின்றனர். இவ்வாறும் எமது பனை வளம் அழிக்கப்படுகின்றது’ என்று வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.