கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவிற்கு இரகசியமாக இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டிருக்கிறது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
இவருக்கு பதவியை வழங்கும் போது கொல்லப்பட்ட ஐ.தே.க. ஆதரவாளர் நினைவுக்கு வரவில்லையா?
ஐக்கிய தேசிய கட்சியிலிருக்கும் போது கிடைக்காத வெற்றி , பொதுஜன பெரமுனவுடன் இணைந்த போது ஜனாதிபதி ரணில் – ராஜபக்ஷவிற்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதி ரணில் நாட்டை ஆட்சி செய்கின்றார். அவரை ராஜபக்ஷாக்கள் ஆட்சி செய்கின்றனர் என்பதே உண்மை என அவர் மேலும் தெரிவித்தார்.