Home தாயக செய்திகள் ஶ்ரீலங்கா அரச படைகளால் இலங்கையில் நிகழ்த்தப்பட்டது “இனப்படுகொலையே” :

ஶ்ரீலங்கா அரச படைகளால் இலங்கையில் நிகழ்த்தப்பட்டது “இனப்படுகொலையே” :

35
0

சிவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை சபையிடம் தாயகத்திலிருந்து வருகைதந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலையாகத்தான் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்திய கோரிக்கையும் பல கோரிக்கைகளை கையளித்ததோடு அங்கு இடம்பெற்ற ஒன்றுகூடலில் பங்கேற்று உரையாற்றினர்.

ஐ.நா மனித உரிமை சபையின் முன் மதியம் 2 மணி 30 மணிக்கு ஆரம்பமான குறித்த ஒன்றுகூடலில் இனப் படுகொலையின் ஆதாரப் புகைப்படங்கள்  சுமார் 12 மீற்றர் நீள மேடையில் சாட்சியங்களாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

ஒன்றுகூடலில் யாழ்ப்பாண மாநகரசபை மேயர் மணிவண்ணன், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா, முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.