Home தாயக செய்திகள் பாராளுமன்றத்தில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம் :

பாராளுமன்றத்தில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம் :

38
0

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு (கட்சித்தலைவர்கள்) கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாளை காலை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற இருக்கின்றது.

பாராளுமன்ற கூட்டத்தின் அடுத்தவார ஒழுங்குப் பத்திரத்தை தீர்மானிக்கும் நோக்கிலேயே இந்த கூட்டம் இடம்பெறுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றம் அடுத்த வாரம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை கூட இருக்கின்றது.

இதேவேளை, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்டத்தில் மேற்கொண்டிருக்கும்  ஒப்பந்தம் அல்லது இணக்கப்பாடு தொடர்பில் விவாதம் ஒன்றுக்கு நாள் ஒதுக்குமாறு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்தின்போது சபாநாயகரிடம் கோருவதாக எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அத்துடன் கோப் குழு மற்றும் அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழு உட்பட பல குழுக்கள் இன்னும் அமைக்கப்படாமல் இருக்கின்றன. அந்த குழுக்களை அமைப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாட இருப்பதாகவும் தெரியவருகின்றது.