இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பாரிய எரிவாயு பற்றாக்குறையை போக்க உலக வங்கி வழங்கிய உதவியிலிருந்து 130 கோடி ரூபாவை ஒரு குறிப்பிட்ட குழுவினர் மோசடி செய்துள்ளதாக கோப் குழுவின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற சுதந்திர ஜனதா சபையில் கலந்துகொண்டு உர்சியாற்ரும் போதே அவ இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
36 டொலருக்கு ஒரு மென்றிக்தொண் எரிவாயுவை கொள்வனவு செய்ய இருந்த நிலையில் அதில் மாற்றம் செய்து ஒரு மெற்றிக்தொண் எரிவாயுவை 129 டொலர் வீதம் வாங்கியதாக காட்டப்படும் கண்க்கிலேயே குறித்த மோசடி இடம்பெற்றிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாடு கஷ்டத்தில் இருக்கும் போதும் கொள்ளையடிப்போர் கூட்டம் தொடர்ந்து தங்கள் கைவரிசையை காட்டி வருவதாகவும், இதை அரசாங்கமோ, குற்றத்தடுப்பு பிரிவோ ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.