ஶ்ரீலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நடிகை தமிதா அபேரத்னவை தலா 500,000/- வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரகலய போராட்டத்தின் உறுப்பினராக இருந்த இலங்கை நடிகை தமிதா அபேரத்ன, கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் செப்டம்பர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
சட்டவிரோதமாக கூடியிருந்தமை, ஜனாதிபதி அலுவலகத்திற்கு சட்டவிரோதமாக பிரவேசித்தமை மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளுக்காக நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.