Home செய்திகள் 3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் – பெளத்த மதகுரு தலைமறைவு!

3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் – பெளத்த மதகுரு தலைமறைவு!

54
0

கல்முனை பிரதேசத்தில் உள்ள விகாரை உன்றில் வைத்து மூன்று இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பெளத்த மதகுருவை கைது செய்ய பொலிஸார் தேடிவரும் நிலையில் குறித்த பெளத்த மதகுரு தலைமறைவாகியுள்ளார்.

குறித்த விகாரையில் புதிதாக இணைந்த மூன்று இளம் பிக்குகள் திடீர் உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே மூவரும் தாம் பல சந்தர்ப்பங்களில் த்லைமை பெளத்த துறவியால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு சட்டவைத்திய அதிகாரி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த அறிக்கையின் அடிப்படையில் பாதிப்பிற்குள்ளான மூன்று இளம் பிக்குகளையும் நேரில் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று இளம் பிக்குகளின் ஆசனப்பகுதி துவாரத்தில் காயங்களும், தளும்புகளும் காணப்படுவதுடன் மூவரும் ளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பதை வைத்திய அறிக்கைக்கைகள் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய தலைமறைவாகியுள்ள பெளத்த மதகுருவை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் தேடுதலில் இறங்கியுள்ளனர்.