Home முக்கிய செய்திகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் USAID நிர்வாகி சமந்தா பவர்:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் USAID நிர்வாகி சமந்தா பவர்:

53
0

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung), USAID திணைக்கள பிரதி பிரதம அதிகாரி சோனாலி கோர்டே (Sonali Korde) உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நேற்றையதினம் (10) இலங்கை வந்தடைந்த அவர், ஜா எல பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போ, நாட்டின் விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவுள்ளதாகஉறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த அவர் இன்றையதினம் (10) இலங்கையிலிருந்து புற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.