இன்று (10) காலை பதுளை, ஹிங்குருகமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 83 வயதான தாய் அவரது 55 வயதான மகள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள க்ளன்பீல்வத்த – காந்தன்லயம் எனும் தோட்டத்திலுள்ள தோட்ட வீடொன்றில், கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 83 வயதான பெண்ணின் 62 வயதான மற்றுமொரு மகள் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஒரே வீட்டில் தனியாக வாழ்ந்த தாயான எச்.எம். ரன்மெணிக (83), மகள் ஆர்.எம். ஜயவதி (55) ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், ஆர்.எம். மிசினோனா (62) எனும் பெண் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.