
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராணி இரண்டாம் எலிசபத்தை நினைவுகூரும் முகமாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு எதிர்வரும் 19ஆம் திகதியை தேசிய துக்கதினமாக அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அன்றைய தினம்வரை இரங்கல் தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் ஏற்றுமாறும் அரச நிறுவனங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
மகாராணி இரண்டாம் எலிசபத்தின் ஆட்சி அத்த்காரத்திற்கு உட்பட்டிருக்கும் கொமன்வெல்த் நாடுகளில் ஒன்றான இலங்கை முன்மாதிரியாக முதன்முதலாக பிரித்தானியாவிற்கு வெளியே மகாராணியின் மறைவிற்காக “தேசிய துக்க தினமாக செப்ரம்பர் 19 ஐ அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.