
மிக நீண்ட கால ஆட்சி புரிந்து நேற்று 08-09-2022 மாலை உலகை விட்டு விடைபெற்று சென்ற பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபத் அவர்களின் உடல் தாங்கிய பேழை இலண்டனுக்கு வந்ததும் அவரது இறுதிச் சடங்கிற்கு முன்பதாக 4 நாட்கள் வெஸ்ட்மினிஸ்ரர் மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக துயில் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட்மினிஸ்ரர் பிரமாண்ட மண்டபம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மையத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் பழமையான பகுதியாகும்.
2002 ஆம் ஆண்டில் மகாராணியின் தாயாரின் உடல் தாங்கிய பேழை வெஸ்ட்மினிஸ்ரர் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த போது சுமார் இரண்டு இலட்சம் (200,000) மக்கள் கண்ணீர் மல்க பார்வையிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.