Home செய்திகள் சுதந்திரகட்சியின் 5 எம்.பி.க்களை கட்சியில் இருந்து நீக்க மைத்திரி முடிவு:

சுதந்திரகட்சியின் 5 எம்.பி.க்களை கட்சியில் இருந்து நீக்க மைத்திரி முடிவு:

41
0

சுதந்திரகட்சியின் 5 எம்.பி.க்களை கட்சியில் இருந்து நீக்க அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகிய 4 பேர் இராஜாங்க அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். மேலும் அமைச்சரவை அமைச்சர் பதவிக்காக துமிந்த திஸாநாயக்க காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையிலேயே சுதந்திரகட்சியின் தீர்மானத்திட்கு மதிப்பளிக்காமல்  அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற மற்றும் அமைச்சுப் பதவி பெறுவதற்குத் தயாராக உள்ள குறித்த 5 எம்.பி.க்களை கட்சியில் இருந்து நீக்க மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க அண்மையில் சந்திரிகா குமாரதுங்க சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில், சுதந்திரக்கட்சியை அழித்து விட்டார்கள். அதில் இப்போது சில பைத்தியக்காரர்கள் மட்டுமே உள்ளனர். என தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை சுதந்திரக்கட்சியை உடைக்க மகிந்த மற்றும் ரணிலின் பின்னணியில் செயற்பட்ட மைத்திரிபால சிறீசேன இப்போது அக்கட்சியின் தலைவராக இருந்தாலும் ராஜபக்‌ஷேக்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாகவும் இப்படி தமது கட்சி எம்.பி க்களை கட்சியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.