கனடாவின் Saskatchewan பிராந்தியத்தில் 10 பேரின் படுகொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.
Saskatchewan பிராந்தியத்தில் Rosthern பகுதியில் மறைந்திருந்த 32 வயதான “மயில்ஸ் சாண்டர்சன்” திருடப்பட்ட வாகனம் ஒன்றில் தப்பியோட முற்பட்ட வேளை அதிவேக நெடுஞ்சாலையில் வைத்து துரத்தி மடக்கி பிடிக்கப்பட்டதாகவும், இருப்பினும் கைதின் பின்னர் அவர் மரணமடைந்துவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.