எரிபொருள் நெருக்கடியில் சிக்கிள்ள இலங்கைக்கு சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை ஐந்து வருட காலத்துக்கு கடன் அடிப்படையில் தொடர்ச்சியாக வழங்க சவுதி அரேபியா இணக்கம் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அரசாங்க மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.