
பிரித்தானியாவின் மகாராணி Queen Elizabeth II இன்று மரணமானார் எனும் துயரச் செய்தி பிரித்தானியா வாழ் மக்களுக்கு மட்டுமன்றி உலகெங்கும் பெரும் துயரையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது வாழ்வை மக்களுக்கும், அரியணைக்கும் அர்ப்பணித்து மிக நீண்ட காலங்கள் ஆட்சிபுரிந்த பெருமைக்குரியவராக Queen Elizabeth II திகழ்கிறார்.
1952 -2022 வரையான 70 ஆண்டுகளாக பிரித்தானியாவுக்கு மட்டுமன்றி கொமென்வெல்த் நாடுகளான கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உட்பட்ட பல நாடுகளின் மகாராணியாக ஆட்சி புரிந்த பெருமைக்கும், மதிப்பிற்கும் உரியவர் Queen Elizabeth II.
பிரிட்டிஸ் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து அடையாளம் காணப்படத அளவுக்கு மிக வேகமாக மாறிவந்த உலக மாற்றங்களுக்கு நடுவில் முடியாட்சி கேள்விக்குள்ளாக்கப்பட்ட கொந்தளிப்பான காலங்களில் முடியாட்சியை நிலைநிறுத்துவதில் அவர் பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்கதாக இருந்தது மட்டுமன்றி அவர் ஒரு நிலையான இடத்தையும் பிடித்துக்கொண்டிருந்தார்.


பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி அமைதியாக மறைந்தார்.” அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் விளங்கி நாட்டை துக்க காலத்தில் வழிநடத்துவார். அரசர் மற்றும் அவரது துணைவியான அரசி இன்று மாலை பால்மோரலில் தங்குவார்கள். நாளை அவர்கள் லண்டனுக்குத் திரும்புவார்கள்,” என்று கூறப்பட்டுள்ளது.