
ஶ்ரீலங்கா இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி யின் 26வது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்று (07) அனுஸ்டிக்கப்பட்டது
1996 ஆம் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கழுத்தை நெரித்து படுகொலை செய்திருந்தனர்.
யாழ், செம்மணி பகுதியில் கிருஷாந்தி மட்டுமன்றி அவரை தேடிச் சென்ற அவரது உறவினர்கள் உட்பட ஏராளமான தமிழ் மக்கள் ஶ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு அங்கு புதைக்கப்பட்டுள்ளமை இங்கு நினைவுகூரத்தக்கது.