Home உலக செய்திகள் பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத்தின் மீது “வெள்ளை பெயிண்ட்” வீசிய போராட்டக்காரர்கள் 10 பேர் பொலிஸாரால் கைது!

பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத்தின் மீது “வெள்ளை பெயிண்ட்” வீசிய போராட்டக்காரர்கள் 10 பேர் பொலிஸாரால் கைது!

83
0

உலகின் புகழ்பெற்றதும், அதிக சுற்றுலாப்பயனிகளை கவர்ந்த கட்டிடமுமான “பிரித்தானிய நாடாளுமன்ற” கட்டிடத்தின் மீது வெள்ளைப் பெயிண்ட் வீசி சேதப்படுத்திய 10 பேரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விலங்கு உரிமைகள் மற்றும் காலநிலை மாற்ற எதிர்ப்பாளர்களினால் இன்று (07) காலை பிரித்தானிய நாடாளுமன்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது திடீரென சிலர் வெள்ளை நிறப் பெயின்ரை பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது வீசி சேதப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பிரித்தானிய பொலிஸார் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்ட 10 போராட்டக்காரர்களையும் “criminal damage ” குற்றத்தின் கீழ் கைது செய்தனர்.

1840 இல் கட்டுமானம் தொடங்கி 1876 முதல் குறித்த கட்டிடம் “பிரித்தானிய நாடாளுமன்றம்” ஆக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.