தென்னிலங்கை திரைப்பட நடிகை “தமிதா அபேரத்ன” கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (7) மாலை பத்தரமுல்ல தியத உயனவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது, ஜனாதிபதி அலுவலகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
இலட்சக்கணக்கான மக்களால் நடத்தப்பட்ட போராட்டத்திந் காரணமாக கையகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகைக்குள் பல்லாயிரணக்கானோர் சென்று வந்திருந்த நிலையில் ஜனாதிபதி அலுவலகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி கைது செய்வது என்பது வேடிக்கையான ஒன்றாகவே கருதப்படுகிறது.