Home உலக செய்திகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு உதவ தயார்: அமெரிக்கா

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு உதவ தயார்: அமெரிக்கா

43
0

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதற்கு தயார் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு “பாரிஸ் கிளப் கொள்கைகளின் அடிப்படையில்” அமெரிக்கா நிதி உத்தரவாதங்களை வழங்கும் என தெரிவித்துள்ள அவர் இலங்கை தொடர்பில் உலகவங்கி உட்பட சர்வதேச நாணயநிதியம் உட்பட சர்வதேச நிதியமைப்புகள்  மற்றும் அமெரிக்க அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் கிளப் கோட்பாடுகளுக்கு இணங்க இலங்கைக்கு நிதியுதவி உறுதிமொழிகளை நீடிக்க அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் ஆதரவு அளித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.