பிரித்தானியாவில் கடந்த 2 மாதங்களாக இடம்பெற்றுவந்த ஆளும் கட்சித்தலைமை போட்டியில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று கட்சித் தலைவராக பொறுப்பேற்று பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் Liz Truss.
பிரித்தானியாவின் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட Liz Truss பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியை சந்தித்த பின்னர் அவர் புதிய அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக மகாராணி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
பிரித்தானியாவின் 15வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள Liz Truss பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.