Home தாயக செய்திகள் தொடர் மழையால் மூழ்கிய நகரம் : 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர் மழையால் மூழ்கிய நகரம் : 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

40
0

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  நாட்டின் எட்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் உடதும்பர, கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கன, கேகாலை, ருவன்வெல்ல, யட்டியந்தோட்ட புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவனெல்ல, குருநாகல் மாவட்டத்தில் மல்லவப்பிட்டிய, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு நேற்று இரவு முதல் பெய்த அடைமழையால் கேகாலை மாவட்டத்தில் அவிசாவளை கேகாலை பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அங்குருவெள்ள நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதுடன் வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு  நீர் புகுந்து இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 

அங்குருவெள்ள குருகொடை ஆறு மற்றும் ரிடி கஹ ஆறு என்பவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டதால் இந்நிலை உருவாகியுள்ளது.