
அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்து யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றி வந்த 8 டிப்பர் வாகனங்களை கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதிகள் எண்மரையும் கைதடி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் இன்று (06) செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனங்களை கைதடி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் சோதனையிட்டபோதே அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்திருந்தமை தெரிய வந்ததை அடுத்து உடனடியாகவே வாகனங்களையும் கைப்பற்றி அதன் சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.