
இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான TATA நிறுவனத்தின் முன்னாள் தலைவரான Cyrus Mistry இன்று மும்பாய் சென்றுகொண்டிருந்த பொது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான டாடாவின் முன்னாள் தலைவரான கோடீஸ்வரரின் மரணம் வணிக உலகிற்கு “பெரிய இழப்பு” என்று இந்தியப் பிரதமர் னரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
54 வயதான Cyrus Mistry, 2016 ஆம் ஆண்டில் TATA நிறுவன தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
TATA நிறுவனமானது உப்பு, எஃகு மற்றும் மென்பொருள் உள்ளிட்ட தயாரிப்புகளை மேற்கொள்வதோடு சுமார் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டும் வருகிறது.
இதே வேளை கடந்த ஆண்டில் (2021) $130 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாய் பெற்றிருந்தது.