Home செய்திகள் IMF நிபந்தனைகளை பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் ஜே.வி.பி கோரிக்கை:

IMF நிபந்தனைகளை பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் ஜே.வி.பி கோரிக்கை:

39
0

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜேவிபியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

“அரசாங்கம் ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் அடங்கிய ஆவணங்களில் கையொப்பமிடப்பட்டதாகக் கேள்விப்பட்டோம். இதை ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவில்லை? இதை ஏன் நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை? இலங்கை அரசு என்ன ஒப்புக்கொண்டது என்பதை உலகம் அறிய வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பூர்வாங்க கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ​​ஜனாதிபதி விக்கிரமசிங்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலிடம் நிபந்தனைகள் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், எனினும் இன்று விக்கிரமசிங்கவே அவற்றை வெளிப்படுத்தவில்லை எனவும் சமரசிங்க தெரிவித்தார்.