Home தாயக செய்திகள் சூழ்நிலைக் கைதியாக உள்ள ஜனாதிபதி ரணில்: இராதாகிருஷ்ணன்

சூழ்நிலைக் கைதியாக உள்ள ஜனாதிபதி ரணில்: இராதாகிருஷ்ணன்

40
0

இன்றைய அரசாங்கத்தின் சகல விடயங்களிலும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களே அதிகாரம் செலுத்துகின்றனர். அவர்களே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் மூலம் தெரிவு செய்தவர்கள். அவர் மக்களால் தெரிவு செய்யப்படவில்லையென்பதே இங்குள்ள பிரச்சினை. அது தான் அவரிடமுள்ள பலவீனம். 

இதை பயன்படுத்திக்கொண்ட மொட்டு கட்சியினர் தாம் நினைத்தப்படி ஜனாதிபதி நடக்க வேண்டும் என நினைக்கின்றனர். 

அவரை ஆட்டுவிக்கப்பார்க்கின்றனர். ரணில் நல்ல மனிதர் ஆனால் இப்போது அவர் சூழ்நிலைக் கைதியாகவே இருக்கின்றார். 

ஆகவே ஸ்திரமற்ற இந்த அரசாங்கம் எத்தனை நாட்களுக்கு இப்படி இயங்கப்போகின்றதோ தெரியவில்லையென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

மேலும் ஸ்திரமான அரசாங்கம் என்றால் நாட்டை நெருக்கடி நிலைமைகளிலிருந்து மீட்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கலாம். 

அதற்காக கொள்கையை மாற்றிக்கொண்டு அமைச்சுப்பதவிகளைப் பெறுவதால் ஆகப்போவதொன்றுமில்லை என்றும் அவர் கூறுகிறார்.