பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலிருந்து தப்பி ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.
தாய்லாந்தில் தற்காலிக விசாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கை திரும்பியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரோபாய காய்நகர்த்தல்களுக்கு அமைவாக தாய்லாந்தில் சிறிது காலம் தங்கியிருந்த கோட்டபாயவை சில அமைச்சர்கள் விமானநிலையத்தில் சந்தித்து வரவேற்பும் கொடுத்துள்ளதாக தகவகள் தெரிவிக்கின்றன.