போர்க் குற்றவாளியும், ஶ்ரீலங்கா பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா “மகாமான்ய பிரதாபாதிகேஷ்வர விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஜெனரல் சவேந்திர சில்வா சமய மேம்பாட்டிற்கு ஆற்றிய தேசிய சேவையை பாராட்டும் வகையில் அஸ்கிரி மகா விகாரையின் அபினந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மற்றும் போராளிகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து மிகப்பெரும் இனப்படுகொலையை செய்த “போர்க்குற்றவாளிகள்” என அடையாளப்படுத்தப்பட்டு பிரித்தானியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றிலும் சாட்சியங்களும், அவர்களை கைது செய்ய கோரும் மனுக்களும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.