Home செய்திகள் யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் 100 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது:

யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் 100 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது:

60
0

யாழ்ப்பாணம், பலாலி, அன்ரனிபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை சுமார் 100 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் வாகனத்தையும் கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் பொலிஸார் கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பலாலி அன்ரனிபுரம் பகுதியில் அதிகாலை இரண்டு மணியளவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணித்த வாகனத்தை கடற்படையினர் சோதனையிட்ட போது, அதனுள் பெருந்தொகையான கஞ்சா காணப்பட்டுள்ளது.அதனை அடுத்து வாகனத்தை கைப்பற்றிய கடற்படையினர், வாகனத்தில் இருந்த மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர்.