Home தாயக செய்திகள் யாழில் இடம்பெற்ற விசித்திர நிகழ்வு!

யாழில் இடம்பெற்ற விசித்திர நிகழ்வு!

69
0

யாழ்ப்பாணம் – புலோலியில் தமிழர் ஒருவரின் நிதியில் ஶ்ரீலங்கா இராணுவம் “முன்னாள் போராளி குடும்பம்” ஒன்றிற்கு வீடு கட்டிக் கொடுத்த விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விஷ் நடராஜா எனும் தமிழரின் நன்கொடையில் குறித்த வீடு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே முன்னிலையில் பிரசாந்தன் தர்மராணி தம்பதிகளுக்கே நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது சரணடைந்த போராளிகளில் ஏராளமானோரை கொன்று குவித்து எஞ்சியவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்து அதில் ஒரு பகுதியினரை சர்வதேச கண்துடைப்பிற்காக புனர்வாழ்வு எனும் பெயரில் விடுதலை செய்து பின் அவர்களுக்கு தாம் உதவுவது போல “நலிணக்கம்” எனும் பெயரில் நாடகமாடி வரும் ஶ்ரீலங்கா படைத்தரப்பினர்களிடமே நிதியை நன்கொடையாக கையளித்த “விஷ் நடராஜாவின் செயல் விசித்திரமானதும், வெறுக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.