Home முக்கிய செய்திகள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

52
0

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, லசந்த அழகியவன்ன மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோரின் சொத்துக்களை சேதப்படுத்தியமை  வீடுகள், மற்றும் அலுவலகங்களைத் தாக்கி, எரித்து, அழித்தமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.