Home அறிவியல் சந்திரனில் ஆராய்ச்சியின் புதிய சகாப்தத்தை தொடங்க நாசா தயார்!

சந்திரனில் ஆராய்ச்சியின் புதிய சகாப்தத்தை தொடங்க நாசா தயார்!

85
0

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா சந்திரனின் ஆராச்சியின் புதிய சகாப்தத்தை தொடங்கும் முகமக புதிய ராட்சத நிலவு ராக்கெட் ஒன்றை விண்வெளியில் ஏவ தயாராகியுள்ளது.

50 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மக்களை மீண்டும் சந்திர மேற்பரப்பில் வைப்பதை நோக்கமாகக் கொண்ட அதன் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் அடித்தளமாக SLS (Space Launch System) எனும் இந்த அதி சக்திவாய்ந்த விண்வெளி ராக்கெட் ஐ நாசா தாயாரித்துள்ளது.

இன்று (29) திங்கட்கிழமை Kennedy Space Centr இல் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள இந்த ராக்கெட் ஓரியன் எனப்படும் சோதனைக் காப்ஸ்யூலை பூமியிலிருந்து வெகு தொலைவில் செலுத்துவதே இதன் வேலையாக இருக்கும் எனவும், இந்த விண்கலம் ஆறு வாரங்களில் பசிபிக் பெருங்கடலில் ஒரு ஸ்பிளாஷ் டவுனுக்கு வீடு திரும்புவதற்கு முன்பு ஒரு பெரிய வளைவில் சந்திரனைச் சுற்றி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.