Home தாயக செய்திகள் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளியேற முயற்சித்த 44 பேர் கைது:

கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளியேற முயற்சித்த 44 பேர் கைது:

66
0

இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 44 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் – திருகோணமலை கடற்பரப்பில் வைத்தே குறித்த நபர்களூம் அவர்கள் பயணித்த படகும் கைதுசெய்யப்பட்டுள்ளது.

இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஶ்ரீலங்கா கடற்படையினரிடம் சிக்கிய குறித்த சந்தேகநபர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் இன்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படுவர் என கடற்படை தெரிவித்துள்ளது.