புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் டெலிகொன்பரன்ஸ் முறை மூலம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுப்பிய கரிசனைகள் குறித்து தீர்வை காண்பதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.
கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் புலம்பெயர் அமைப்புகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையின் போது, தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யவேண்டும், வடக்குகிழக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதற்கு முடிவு காணவேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் முன்வைத்துள்ளன.சமூகங்களிற்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்தவேண்டும் எனவும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.