Home செய்திகள் தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது:

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது:

20
0

இலங்கை – தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை நேற்று சனிக்கிழமை (27) இரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களும் ஒப்படைக்கப்பட்டு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.