Home செய்திகள் தமிழ் மக்களுக்கு இனரீதியான பிரச்சினைகள் எவையும் இல்லை என்கிறார் டக்ளஸ்!

தமிழ் மக்களுக்கு இனரீதியான பிரச்சினைகள் எவையும் இல்லை என்கிறார் டக்ளஸ்!

45
0

இலங்கையில் தமிழ்மக்களுக்கு இனரீதியான பிரச்சினைகள் எவையும் இருப்பதாக தான் கருதவில்லை. என கடற்றொழில் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (26) கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளிக்கும் போதே அவர் மெற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், பொதுமன்னிப்பு என்ற விடயம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மாத்திரமன்றி, அது இராணுவத்தினருக்கும் பொருந்தக்கூடியதாக அமையவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களின் நெருங்கிய நண்பனாகவும், தமிழ் தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் / செயற்பாட்டாளர்களின் எதிரியாகவும் நீண்டகாலமாக செயற்பட்டு வரும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் EPRLF இயக்கத்திலிருந்து பிரிந்து EPDP எனும் குழுவின் தலைவராகவும், இந்திய, இலங்கை இராணூவத்திற்கான துணைக்குழுவாகவும் செயற்பட்டு வந்தவர் என்பதும் தொடர்ந்தும் இலங்கை ஆட்சியாளர்களோடும், இலங்கை படைத்தரப்பினரோடும் தற்போதும் இணைந்து செயற்படுபவர் என்பதும் பெரும்பான்மை தமிழ் மக்களின் கருத்தாக இருந்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் இந்திய இராணுவம் இருந்த போது அதிகளவான காட்டிக்கொடுப்புக்களை செய்தும், தமிழ் இளைஞ்ஞர் யுவதிகள் உட்பட பெரும்பாலான தமிழ் மக்களை சித்திரவதை செய்து கொலைசெய்த குற்றச்செயல்களில் இராணுவத் துணைக்குழுக்களாக இவ்விரு (EPDP, மற்றும் EPRLF) குழுக்களும் ஈடுபட்டிருந்தமை பெரும்பாலான தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் வலியை ஏற்படுத்தும் நினைவுகளாக பதிந்தே உள்ளன.