Home செய்திகள் SLPP பா.உறுப்பினர்களின் சொத்துக்களை சேதப்படுத்தியதாக 6 பேர் கைது:

SLPP பா.உறுப்பினர்களின் சொத்துக்களை சேதப்படுத்தியதாக 6 பேர் கைது:

56
0

கடந்த மே மாதம் 9 ஆம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்தவின் வீடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த, மற்றும் சுமித் உடுகும்புரவின் ஜீப் மீது மே மாதம் 10ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஹோமாகம மற்றும் வெலிவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த 6 சந்தேகநபர்களையும் இன்று (27) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.