ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை முடித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 500 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்துக்கு நேரில் வந்த நீதியரசர் ஆறுமுகசாமி முதல்வரை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாட்சிகளை விசாரிப்பதில் தாம் காலதாமதம் செய்யவில்லை என்று தெரிவித்தார். சாட்சிகளிடம் விரிவாக விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆணையத்தின் ஐயங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன என்று கூறிய அவர், இரண்டு பிரிவுகளாக பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறிய அவர், விசாரணைக்கு சசிகலா முழு ஒத்துழைப்பு அளித்தார் என்றும் குறிப்பிட்டார்.