Home தாயக செய்திகள் அரிசி விலையை 290 ரூபாவாக அதிகரிக்க முடிவு!

அரிசி விலையை 290 ரூபாவாக அதிகரிக்க முடிவு!

55
0

செப்டெம்பர் மாதம் முதல் அரிசி விலையை 290 ரூபாவாக அதிகரிக்க வேண்டி வரலாம் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஒரு கிலோ நெல் 140 ரூபா தொடக்கம் 150 ரூபா வரையிலான விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டியிருப்பதனால் ஒரு கிலோ நெல்லின் விலையை விட இரு மடங்காக அரிசியை விற்பனை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பதால் அரிசியின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறுகின்றனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபை நெற்பயிர்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதால் தாங்களும் நெல் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.